Apr 25, 2019 06:20 AM

தேர்தலில் போட்டியிடும் நடிகை கஸ்தூரி! - யாருடன் இணைகிறார் தெரியுமா?

தேர்தலில் போட்டியிடும் நடிகை கஸ்தூரி! - யாருடன் இணைகிறார் தெரியுமா?

90 களில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருந்த கஸ்தூரி, தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருவதோடு, சமூக வலைதளங்களில் சர்ச்சையான கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அரசியல்வாதிகளை போல, மேடையில் மணி கணக்கில் பேசும் கஸ்தூரி, எது பேசினாலும் அது சர்ச்சையாகி வைரலாவதால் மீடியாக்களும் அவரை சுற்றியே வட்டமிடுகின்றன.

 

தற்போது, சலங்கை துரை இயக்கத்தில் ‘இ.பி.கோ 302’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் கஸ்தூரி தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

 

படத்தின் புரோமோஷன் நிகழ்வில் கலந்துக் கொண்ட கஸ்தூரியிடம் அரசியல் குறித்து கேட்டதற்கு, “பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்ய நிறைய கட்சிகள் என்னை அழைத்தன. கட்சிகள் சார்ந்த அரசியலில் எனக்கு ஆர்வம் இல்லை. சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் சமீபகாலமாக அரசியலுக்கு வந்ததாக தெரியவில்லை. அரசியலை பொருத்தவரை நான் ஒரு கத்துக்குட்டி. எனக்கே இந்த தேர்தல் ஏமாற்றத்தை தான் கொடுத்தது. நான் களம் இறங்கி இருக்கலாமோ என்று எண்ண தோன்றியது. எனக்கு பிரபலம், பின்புலம், மக்கள் சேவை அனுபவம் என சில தகுதிகள் இருக்கின்றன. நான் உள்ளே நுழைந்தால் நிறைய நல்லவர்களும் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக களம் இறங்க வாய்ப்பு உண்டு.” என்றார்.

 

மேலும், சுயேச்சையாக போட்டியிடுவீர்களா? என்று கேட்டதற்கு, சுயேச்சையாக நிற்க நான் பெரிய ஆள் கிடையாது, சுயேச்சையை மதித்து தமிழகத்தில் ஓட்டும் போட மாட்டார்கள், அதனால் தனித்தோ அல்லது சுயேட்சையாகோ நிற்க மாட்டேன், என்று கூறினார்.

 

Kasthuri and Rajinikanth

 

இந்த நிலையில், நடிகை கஸ்தூரி நடிகர் ரஜினிகாந்தின் கட்சியில் இணைந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும், இது குறித்து ரஜினிகாந்திடம் விரைவில் அவர் பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.