Mar 14, 2020 08:53 AM

அஜித் ரசிகருக்கு ஆப்பு! - கஸ்தூரியின் அதிரடியால் கம்பெனி எடுத்த நடவடிக்கை

அஜித் ரசிகருக்கு ஆப்பு! - கஸ்தூரியின் அதிரடியால் கம்பெனி எடுத்த நடவடிக்கை

நடிகை கஸ்தூரிக்கும், அஜித் ரசிகர்களுக்கும் அவ்வபோது சமூக வலைதளத்தில் பெரும் யுத்தம் நடைபெறுகிறது. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி, பிரதமர் உள்ளிட்ட யாராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ கருத்து சொல்லிவிடுவார். அவரது கருத்துக்கு எதிர்ப்பு, ஆதரவு என்று இரண்டுமே கிடைக்கும், என்பதால், அவ்வபோது வாக்குவாதத்திலும் ஈடுபடுவார். ஆனால், இந்த வாக்குவாதம் ஆரோக்கியமானதாக இருந்தால் சரி, அதுவே ஆபசமாக இருந்தால், பாவம் கஸ்தூரி.

 

கஸ்தூரியிடம் அடிக்கடி வாக்கு வாதம் செய்யும் அஜித் ரசிகர்கள், ஆபாசமான பதிவுகளை போட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்து விடுகிறார்கள். சமீபத்தில், கஸ்தூரி குறித்து அஜித் ரசிகர் போட்ட ஆபாசமான பதிவு ஒன்று பெரும் அதிர்ச்சியளித்தது. இந்த பதிவால் ஆத்திரமடைந்த கஸ்தூரி, அஜித்தின் மேனஜர் சுரேஷ் சந்திரா மற்றும் அஜித்திடம் நியாயம் கேட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

 

ஆனால், அஜித் தரப்பில் இருந்து இது குறித்து எந்தவித பதிலும், நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், டிவிட்டர் நிறுவனம் கஸ்தூரிக்கு ஆதரவாக நடவடிக்கை எடுத்திருக்கிறது. ரசிகரின் கீழ்த்தரமான பதிவு குறித்து அஜித் மற்றும் அவரது மேனஜரிடம் முறையிட்ட நடிகை கஸ்தூரி, ட்விட்டர் இந்தியாவிடமும் முறையிட்டது. அதன்படி, ட்விட்டர் இந்தியா நிறுவனம் தற்போது கஸ்தூரியை ஆபசமாக பேசிய ரசிகரின் கணக்கை நீக்கியுள்ளது.

 

டிவிட்டர் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் கஸ்தூரி ஆறுதல் அடைந்திருக்கிறாராம்.