May 28, 2019 07:11 AM

‘நந்தினி’ சீரியலில் இருந்து விலகிய காவ்யா!

‘நந்தினி’ சீரியலில் இருந்து விலகிய காவ்யா!

திரைப்படங்களைப் போல சீரியல்களும் தற்போது மக்களிடம் வரவேற்பு பெற்று வருவதால், சீரியல் நடிகர், நடிகைகள் மக்களிடம் பிரபலமாகி வருகிறார்கள். இதனால், அவர்களது நடவடிக்கைகள் அனைத்தையும் மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில், கன்னட சீரியல்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘நந்தினி’ சீரியலுக்கும் அதில் நடிக்கும் காவ்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதோடு, டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் அந்த சீரியல் நம்பர் ஒன் இடத்தில் இருக்கின்றன.

 

இந்த நிலையில், நந்தினி சீரியலில் இருந்து நடிகை காவ்யா வெளியேறியுள்ளார். தன்னுடைய வேடத்திற்கு முக்கியத்துவம் குறைவாக இருப்பதாக புகார் கூறிய காவியா, அதன் காரணமாக சீரியலில் இருந்து வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார்.

 

காவியா வெளியேறியதால், அவரது வேடத்திற்காக வேறு ஒரு நடிகையை சீரியல் குழு தேடி வருகிறது.