Jul 09, 2018 05:35 PM

நடிப்புக்கு ஒரு மாதம் லீவு போட்ட மகிமா! - எதற்காக தெரியுமா?

நடிப்புக்கு ஒரு மாதம் லீவு போட்ட மகிமா! - எதற்காக தெரியுமா?

‘சாட்டை’ மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான மகிமா, தொடர்ந்து இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் உருவாகும் ‘கிட்னா’, ’ஐங்கரன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், நாளை முதல் ஒரு மாதத்திற்கு மகிமா நடிப்புக்கு லீவு போட உள்ளார். ஆம், எம்.ஏ ஆங்கில இலக்கியம் படிக்கும் அவர், நாளை முதல் தொடங்க இருக்கும் தேர்வை எதிர்கொள்ள இருக்கிறார். இரண்டாம் ஆண்டு என்பதால், அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று பட்டத்தை வாங்கிவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுபவர், தற்போது நடிப்புக்கு விடுமுறை விட்டுவிட்டு படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறாராம்.

 

தேர்வு முடிந்ததும் மீண்டும் நடிக்க இருப்பவர், மம்மூட்டி நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாக உள்ளார்.