அசரவைக்கும் நடிகை மீனா! - வைரலாகும் லேட்டஸ் புகைப்படம்

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த மீனா, 1991 ஆம் ஆண்டு வெளியான ‘என் ராசாவின் மனசுனிலே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்தவர், தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். ரஜினி, கமல், சிரஞ்சீவி, மோகன்லால் உள்ளிட்ட அனைத்து மொழி டாப் ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்திருக்கிறார்.
திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வந்த மீனா, தற்போது மலையாளப் படங்களில் கதையின் நாயகியாக நடித்து வருபவர், வெப் சீரிஸ்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது ரஜினிக்கு ஜோடியாக ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருபவர், ஏராளமான மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், மீனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் அனைவரையும் அசரவைத்துள்ளது. ஆம், மீனா தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறிவிட்டார். பட வாய்ப்புகள் அதிகரித்ததால், உடல் எடையை குறைக்கும் முடிவுக்கு வந்த மீனா, கடினமான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டினால், உடல் எடையை குறைத்திருக்கிறார்.
மீனாவின், இந்த புதிய புகைப்படங்களை பார்ப்பவர்கள் ஆச்சிரியத்தில் திகழ்த்து போகிறார்கள். இதோ, அந்த புகைப்படம்,