Dec 22, 2019 08:39 AM

விஸ்வரூபம் எடுக்கும் நடிகை மோனலின் மரண சர்ச்சை! - சிக்கப் போகும் சினிமா பிரபலங்கள்

விஸ்வரூபம் எடுக்கும் நடிகை மோனலின் மரண சர்ச்சை! - சிக்கப் போகும் சினிமா பிரபலங்கள்

நடிகை சிமரனின் தங்கையான மோனல், கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ‘பார்வை ஒன்றே போதுமே’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு விஜயின் ‘பத்ரி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார் கடந்த 2002 ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணம் காதல் விவகாரம் என்று கூறப்பட்டது.

 

மேலும், தன்னுடன் நடித்த நடிகர் குணாலை மோனல் காதலித்து வந்ததாகவும், அது தோல்வியில் முடிந்ததால் தான் அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், உண்மையில் மோனால் டான்ஸ் மாஸ்டர் கலாவின் சகோதரர் பிரசன்னாவை தான் காதலித்தாராம். மோனலை காதலித்து அவருடன் பழகிய பிரசன்னா, திடீரென்று அவரை கழட்டிவிட்டதால் தான் மோனல் தற்கொலை செய்துக் கொண்டதாக, சிம்ரன் போலீசில் புகார் அளித்தார்.

 

இது தொடர்பாக டான்ஸ் மாஸ்டர் கலா, பிரசன்னா ஆகியோரிடம் போலீஸ் விசாரணை மேற்கொண்டது. பிறகு அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

 

இந்த நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு மோனலின் மரணம் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்கொலை செய்துக் கொண்ட மோனல், தனது மரணத்திற்கு காரணமானவர்கள் பற்றி டைரியில் எழுதி வைத்திருந்தாராம். ஆனால், அந்த டைரியை டான்ஸ் மாஸ்டர் கலாவின் தூண்டுதலால் நடிகை மும்தாஸ் மோனல் வீட்டில் இருந்து எடுத்துச் சென்றுவிட்டதாக சிம்ரன் போலீசில் புகார் அளித்திருக்கிறார். மேலும், இதற்கான ஆதாரங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

 

மோனால் இறப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு சினிமா பிரபலம் ஒருவரிடம் போனில் பேசியிருக்கிறார். அதற்கான ஆதாரமும் போலிசிடம் கிடைத்திருப்பதால், மோனல் மரணத்திற்கு காரணமானவர்கள் தற்போது போலிசிடம் வசமாக சிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.