Aug 02, 2018 09:04 PM

சத்தமில்லாமல் தெலுங்கு சினிமாவில் சாதித்த நந்திதா!

சத்தமில்லாமல் தெலுங்கு சினிமாவில் சாதித்த நந்திதா!

‘அட்ட கத்தி’ மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நந்திதா, தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே, இவர் நடித்த முதல் தெலுங்குப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலிலும் சாதனை படைத்ததால் அங்கேயும் வெற்றிகரமான நடிகை என்று பெயர் எடுத்தவர், இதுவரை ஐந்து தெலுங்கு படங்களில் நடித்து முடித்திருக்கிறார்.

 

தொடர்ந்து பல முன்னணி தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்து வரும் நந்திதா, தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘சீனிவாச கல்யாணம்’ படத்டில் பத்மாவதி என்ற கிராமிய பெண் வேடத்தில் நடித்திருக்கிறாராம்.

 

வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தில் பல அதிரடியான விர தீர காட்சிகளில் டூப் போடாமல் நடித்திருக்கும் நந்திதா, இப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோயின் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

தமிழில் வைபவுடன் ஒரு படம் மற்றூம் ‘நர்மதா’ ஆகிய படங்களில் நடித்து வரும் நந்திதா, கன்னடத்தில் முன்னணி ஹீரோ ஒருவருடன் நடிக்க விரைவில் ஒப்பந்தமாக இருக்கிறார்.

 

இப்படி தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் தான் நடிக்கும் படங்களின் புரோமோஷன் நிகழ்வுகளில் தவறாமல் கலந்துக்கொள்ளும் நந்திதா, தற்போது ‘சீனிவாச கல்யாணம்’ படத்தின் புரோமோஷனுக்காக தெலுங்கு சினிமாவில் முகாமிட்டுள்ளார்.