Oct 25, 2019 07:02 PM

நடிகை பிரியா ஆனந்துக்கு கல்யாணம்!

நடிகை பிரியா ஆனந்துக்கு கல்யாணம்!

ரசிகர்களை கவர்ந்த இளம் ஹீரோயின்களில் பிரியா ஆனந்த் ஒருவர். தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம் இந்தி என்று பல மொழிப் படங்களில் நடித்து வந்த பிரியா ஆனந்த், திடீர் என்று தமிழ் சினிமாவில் காணாமல் போய்விட்டார். தற்போது ‘ஆதித்ய வர்மா’ படத்தில் நடித்திருப்பவர் மேலும் சில படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

 

இந்த நிலையில், இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட பிரியா ஆனந்த், தனக்கு அடுத்த ஆண்டு கல்யாணம் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.

 

அதாவது, நிகழ்ச்சியில் பிரியா ஆனந்திடம், “எப்போது கல்யாணம்” என்று கேட்டதற்கு, ”நீங்கள் விரும்பினால் அடுத்த ஆண்டு எனக்கு தலை தீபாவளி தான்”, என்று ஜாலியாக கூறினார்.

 

பிரியா ஆனந்த் ஜாலியாக கூறியது தான், தற்போது அவருக்கு கல்யாணம் என்று வேகமாக பரவி வந்தாலும், பட வாய்ப்புகள் குறைந்ததால் ஒருவேளை அடுத்த ஆண்டு கல்யாணம் செய்துக்கொண்டு செட்டிலானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.