May 04, 2019 04:31 PM

திருமணமான நடிகரை திருமணம் செய்துகொள்ள விரும்பும் ராசி கண்ணா!

திருமணமான நடிகரை திருமணம் செய்துகொள்ள விரும்பும் ராசி கண்ணா!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷி கண்ணா, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்து வருகிறார். நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தற்போது பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணமான முன்னணி நடிகர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

 

அதாவது, தற்போது திருமணமான நடிகர்களில் யாருக்கு திருமணம் நடக்கவில்லை என்றால், நீங்கள் எந்த நடிகரை திருமணம் செய்து கொள்வீர்கள், என்று பேட்ட்யில் கேள்வி கேட்கப்பட்டது. 

 

அதற்கு பதில் அளித்த ராசி கண்ணா, சூர்யா தான், ஜோதிகா மேடமிடம் அவர் நடந்து கொள்ளும் விதங்களை எல்லாம் வைத்து பார்க்கும் போது, அவரை தான் திருமணம் செய்து கொள்வேன், என்று தெரிவித்திருக்கிறார்.