Sep 27, 2019 05:40 AM

இளம் நடிகருக்கு அடிமையான நடிகை ரேகா!

இளம் நடிகருக்கு அடிமையான நடிகை ரேகா!

1986 ஆம் ஆண்டு வெளியான ‘கடலோர கவிதைகள்’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ரேகா, தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்தார். தற்போது அம்மா உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர், ஜி.வி.பிரகாஷ், ஷாலினி ஆகியோர் நடித்திருக்கும் 100 சதவீதம் காதல் படத்தில் அம்மா வேடத்தில் நடித்திருக்கிறார்.

 

இப்படம் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், நேற்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகை ரேகா, தன்னைப் பற்றி யுடியூபில் தவறான செய்தி வெளியாவதற்கு கண்டனம் தெரிவித்தார்.

 

மேலும், ”நான் இறந்துவிட்டதாக பல முறை செய்தி வெளியிடுகிறார்கள். அதை லட்சக்கணக்கான மக்கள் பார்ப்பதால் அவர்களுக்கு நிறைய பணம் கிடைக்கிறது. இதற்காக, என்னை பல முறை சாகடிப்பதா?, சரி அவர்கள் தான் அப்படி செய்கிறார்கள் என்றால், அதை பார்க்கும் மக்களுக்கு பொது அறிவு என்பதே இல்லதது போல கமெண்ட் செய்கிறார்கள். விளம்பரத்திற்காக நானே அதுபோன்ற செய்திகளை வெளியிடுவதாக மக்கள் கருதுகிறார்கள். விளம்பரத்திற்காக ஒருவர் தான் இறந்துவிட்டதாக கூறுவாரா? இதை மக்கள் ஏன் யோசிக்க மாட்ராங்க.

 

நான் இப்போதும் நல்ல ஆரோக்கியத்துடன் ஜம்முனு தான் இருக்கிறேன். இன்னும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்று நினைத்து கதைகள் கேட்டு வருகிறேன். என் வாழ்க்கையில் எப்போதும் வெற்றி தான், இனியும் அப்படி தான்.” என்றார்.

 

மேலும், படம் குறித்து பேசியவர் ”ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தில் நல்ல நடித்திருக்கிறார். அவர் நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், அவரது இசைக்கு நான் இப்போதும் அடிமை” என்று தெரிவித்தார்.

100 Percent Kadhal