Jun 19, 2020 10:29 AM
’அழகு’ சீரியலில் இருந்து ரேவதி அவுட்! - மற்றொரு பிரபல நடிகை இன்

கொரோனா பிரச்சினையால் ஒட்டு மொத்த பொழுதுபோக்கு துறையே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சினிமா மட்டும் இன்றி சீரியல்கள் ஒளிபரப்பும் தடைபட்டதால் மக்கள் பெரிதும் அப்செட்டாகிவிட்டார்கள். இதற்கிடையே, ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்த அரசு, சீரியல் படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளித்தது.
இதையடுத்து, பல சீரியல்களின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அந்த வகையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘அழகு’ சீரியலின் படப்பிடிப்பும் சமீபத்தில் தொடங்கியது. இதில் அழகு என்ற வேடத்தில் ரேவதி நடித்து வருகிறார். அவரது கணவராக தலைவாசல் விஜய் நடிக்கிறார்.
இந்த நிலையில், ‘அழகு’ சீரியலில் இருந்து நடிகை ரேவதி வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியிருப்பதோடு, அவருக்கு பதில் ஊர்வசி அந்த வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.