Jan 22, 2019 09:58 AM

நடிகை ரித்விகாவுக்கு திருமணம்! - நடிப்புக்கு டாடா காட்டுகிறார்

நடிகை ரித்விகாவுக்கு திருமணம்! - நடிப்புக்கு டாடா காட்டுகிறார்

இயக்குநர் பாலாவின் ‘பரதேசி’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ரித்விகா ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘ஒருநாள் கூத்து’ போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து பிரபலமானர். மேலும், பிக் பாஸ் டிவி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டி பட்டத்தை வென்றார்.

 

தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் ரித்விகாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

 

இது குறித்து பட விழா ஒன்றில் கூறிய ரித்விகா, தான் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறேன். இந்த ஆண்டு எனது திருமணம் நடக்காது, அடுத்த ஆண்டு தான் எனது திருமணம் நடக்கும். தற்போது நான் ஒப்புக்கொண்ட படங்களை நடித்து முடித்துவிடுவேன். புதிய படங்கள் எதையும் ஒப்பந்தம் செய்யப்போவதில்லை. திருமணத்திற்கு பிறகு நடிப்பதா வேண்டாமா என்பதை எனது கணவர் தான் முடிவு செய்வார்.” என்று தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக ரித்விகா ஒருவரை காதலித்து வருவதாக வெளியான தகவலையும், இந்த ஆண்டு திருமணம் நடைபெறும் என்பதையும் மறுத்த ரித்விகா, தனது காதல் குறித்து எந்தவித விளக்கமும் கூறவில்லை.

 

அப்படியானால் அவரது திருமணம் காதல் திருமணம் என்பது உறுதியாகிவிட்டது.