Jun 04, 2019 11:12 AM

படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குநர்! - பரபரப்பு புகார் கூறிய தோழி நடிகை

படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குநர்! - பரபரப்பு புகார் கூறிய தோழி நடிகை

தமிழ் சினிமாவில் தலைவிரித்தாடிய மீ டு விவகாரம் தற்போது ஓய்ந்திருக்கும் நிலையில், பிரபல இயக்குநர் மீது ஹீரோயினுக்கு தோழியாக பல படங்களில் நடித்திருக்கும் ஷாலு சம்மு பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

 

’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்த ஷாலு சம்மு, தொடர்ந்து நயன்தாரா, திவ்யா உள்ளிட்ட பல முன்னணி ஹீரோயின்களுக்கு தோழியாக நடித்து வருகிறார். இதற்கிடையே, இவர் ஆண் ஒருவருடன் மிக நெருக்கமாக இணைந்து ஆடிய நடனம் சமூக வலைதளங்களில் வைரலானது.

 

இந்த நிலையில், ஷாலு சம்முவை பிரபல இயக்குநர் ஒருவர் படுக்கைக்கு அழைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இது குறித்து இன்ஸ்டாகிராமிக் ரசிகர்களிடம் பேசிய ஷாலு சம்முவிடம், “உங்களுக்கு மீ டு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறதா? என்று ரசிகர்கள் ஒருவர் கேட்க, அதற்கு பதில் அளித்த ஷாலு சம்மு, “விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க வேண்டும் என்றால், தன்னுடன் படுக்கையை பகிர்ந்துக் கொள்ள வேண்டும், என்று பிரபல இயக்குநர் கூறினார். ஆனால், அதை நான் அப்போது வெளியே சொல்லவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

 

ஷாலு சம்முவின் இந்த பதிலால் ரசிகர்கள் மட்டும் அல்ல, சினிமா துறையினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.