காதலிப்பதாக கூறி ஏமாற்றிய 2 பேர்! - நடிகை சோனாவின் சோக கதை

விஜயின் ‘ஷாஜகான்’ உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து துணை நடிகையாக வலம் வந்த சோனா, ‘கேள்விக்குறி’, ‘மிருகம்’, ’குசேலன்’ உள்ளிட்ட படங்களில் கவர்ச்சியாக நடித்து பிரபலமானவர் தொடர்ந்த் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் கவர்ச்சியாக நடித்து வந்தார்.
இதற்கிடையே தமிழில் ஜெய் ஹீரோவாக நடித்த ‘கனிமொழி’ என்ற படத்தை தயாரித்தவர் அதன் மூலம் பெரும் இழப்பையும் சந்தித்தார். பிறகு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவருக்கு தமிழில் சரியான வாய்ப்பு அமையாததால் தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் கவனம் செலுத்தி வந்தவர், தற்போது ‘விளம்பரம்’ என்ற தமிழ்ப் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், காதல் என்ற பெயரில் இருவர் தன்னை ஏமாற்றி விட்டதாக நடிகை சோனா தெரிவித்துள்ளார். இது குறித்து சமீபத்திய பேட்டில் ஒன்றில், “ஒருவர் என்னை காதலிப்பதாக கூறி 6 வருடங்கள் பழகினார். இன்னொருவர் 7 வருடங்கள் பழகினார். ஆனால், இருவரும் என்னை ஏமாற்றி விட்டார்கள். அதனால் திருமணம் பற்றி நான் யோசிக்கவே இல்லை.” என்று சோனா தெரிவித்துள்ளார்.
சோனாவுக்கு இரண்டு தங்கைகள் இருக்கிறார்களாம். அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள சோனா, அதன் பிறகு ரகசியங்கள் பல கொண்ட தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிடும் முயற்சியில் ஈடுபட போகிறாராம். தற்போது தனது சுயசரிதையை எழுதி முடித்திருப்பவர், அதை வெளியிட நல்ல பதிப்பாளரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.