Jul 21, 2018 05:07 AM
சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டிக்கு திருமணம்!

செக்ஸ் புகார் மூலம் தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி, தற்போது தமிழ் சினிமாவில் பல புகார்கள் மீது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அதே சமயம், அவரது புகார் ஆதரமற்றது, என்று கூறிய தென்ந்திய நடிகர்கள் சங்கம், அவர் மீது யாராவது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் அறிவித்திருக்கிறது.
இதற்கிடையே, தமிழகத்தில் செட்டில் ஆக முடிவு செய்திருக்கும் ஸ்ரீரெட்டி, தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினராக விரும்புகிறாராம். இதற்காக நடிகர் சங்கத்தின் உதவியை நாட முடிவு செய்திருக்கிறார்.
இந்த நிலையில், பேட்டில் ஒன்றில் ஸ்ரீரெட்டியில் திருமணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், தனது கடந்தகால நிகழ்வுகளை அறிந்து, தம்மை விரும்பு ஏற்றுக் கொள்ள யாராவது முன் வந்தால், அவரை திருமணம் செய்துகொள்ள தயார், என்று கூறியிருக்கிறார்.