விஜய், அஜித் பட நடிகை சுரேகா வாணியின் கணவர் திடீர் மரணம்!

பிரபல குணச்சித்திர நடிகை சுரேகா வாணியின் கணவர், சுரேஷ் திடீர் மரணம் அடைந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் பிரபலமான குணச்சித்திர நடிகையாக வலம் வந்த சுரேகா வாணி, தனுஷுன் ‘உத்தமபுத்திரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ‘தெய்வதிருமள்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘ஜில்லா’, ’பிரம்மா’, ‘எதிர் நீச்சல்’, ‘மெர்சல்’, ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்ததோடு, மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் என்று மூன்று மொழிகளிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேகா வாணியின் கணவர் சுரேஷ், நேற்று சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் சாதிக்க வேண்டும் என்று பெரிய கனவோடு இருந்த சுரேஷின் மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுரேஷ் - சுரேகா வாணி தம்பதிக்கு சுப்ரிகா என்ற மகள் உள்ளார்.