May 06, 2019 11:16 AM
நடிகை ஆகவில்லை என்றால்...! - மனம் திறந்த தமன்னா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் தமன்னா, சினிமாத் துறையில் நுழைந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. 15 ஆண்டுகளாக தனது இடத்தை தக்க வைத்துக் கொண்ட தமன்னா, தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகையாகவில்லை என்றால், தான் எந்த தொழிலுக்கு போயிருப்பேன், என்று நடிகை தமன்னா கூறியிருக்கிறார்.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றி கூறிய தமன்னா, நடிப்பை தவிர வேறு எதையும் நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆனால், ஒருவேளை நான் நடிகை ஆகாமல் இருந்திருந்தால் மருத்துவர் ஆகியிருப்பேன். காரணம் என் குடும்பத்தில் பலரும் இந்த துறையில் தான் உள்ளனர். அதனால் அவர்களை பின்பற்றி மருத்துவர் ஆகியிருப்பேன், என்று தெரிவித்துள்ளார்.