May 15, 2020 08:01 AM

ஏக்கத்தோடு காத்திருக்கும் தான்யா! - எதற்காக தெரியுமா?

ஏக்கத்தோடு காத்திருக்கும் தான்யா! - எதற்காக தெரியுமா?

நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான தான்யா, 2016 ஆம் ஆண்டு வெளியான ‘பலே வெள்ளையத்தேவா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து ‘பிருந்தாவனம்’, ‘கருப்பன்’ ஆகிய படங்களில் நடித்தாலும், எதிர்ப்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றி கிடைக்காததால் பெரிய வாய்ப்புகளும் அமையவில்லை.

 

இதற்கிடையே சிபிராஜ் ஹீரோவாக நடிக்கும் ‘மாயோன்’ என்ற படத்தில் தான்யா ஹீரோயினாக ஒப்பந்தமாக, அப்படமும் தற்போது கொரோனா பாதிப்பால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்த பிறகே சினிமா படப்பிடிப்பு தொடங்கும் என்பதால், தான்யாவின் ஒரே நம்பிக்கையாக இருந்த மாயோன் படமும் கேள்விக்குறியாகிவிட்டது.

 

நடனத்தின் தேர்ச்சி பெற்றதோடு, நடிப்பிலும் பேரார்வத்தோடு இருக்கும் தான்யா, தமிழ் சினிமாவில் தனது தாத்தாவை போல ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்று நினைத்தாலும், அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காததால், அந்த இடத்தை பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்.

 

தற்போது அவரது கையில் இருக்கும் ஒரு படமும், வருமா, வராதா என்ற நிலை இருக்க, கொரோனா முடிந்த பிறகு, பட வாய்ப்புகளுக்காக பல்வேறு அதிரடி நடவடிக்கையில் இறங்க போகிறாராம். அதனால் தான், கொரோனா பிரச்சினை எப்போது முடியும், என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறார்.

Actress Tanya

 

Tanya Ravichandran

 

Actress Tanya Ravichandran

 

Actress Tanya Ravichandran