Jun 07, 2019 04:56 AM

நடிகை தாப்பாவுக்கு திருமணம்! - காதலரை கரம் பிடித்தார்

நடிகை தாப்பாவுக்கு திருமணம்! - காதலரை கரம் பிடித்தார்

ஆதித்யா சேனல் மூலம் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பிரபலமானவர் ஷர்மிளா தாப்பா. நேபாளியான இவர், வேதாளம், விஸ்வாசம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து வருகிறார். தற்போதும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வலம் வரும் தாப்பாவுக்கு நேற்று சென்னையில் திடீர் திருமணம் நடைபெற்றது.

 

நேற்று காலை சென்னை அமைந்தகரையில் உள்ள ஓர் அம்மன் கோவிலில் ரகு என்பவரை தாப்பா திருமணம் செய்துக் கொண்டார். இந்த திருமணத்தில் தாப்பாவின் உறவினர்கள் கலந்துக் கொண்டார்கள்.

 

தாப்பா - ரகு கடந்த பத்து வருடங்களாக காதலித்து வருகிறார்களாம். இவர்களது திருமணத்திற்கு பல பிரச்சினைகள் அவர அத்தனையையும் கடந்து தற்போது திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

தாப்பாவின் கணவர் ரகு உதவி நடன இயக்குநராக பணியாற்றி வருகிறாராம். பிருந்தா, பாபா பாஸ்கர் ஆகியோரிடம் உதவி நடன இயக்குநராக இருக்கிறாராம்.

 

Shamila Thapa and Raghu Marriage