Jan 05, 2020 01:27 PM

கவர்ச்சியை தெறிக்க விடும் வாணி போஜன்! - கண்டுக்காத தமிழ் சினிமா

கவர்ச்சியை தெறிக்க விடும் வாணி போஜன்! - கண்டுக்காத தமிழ் சினிமா

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமானவர் வாணி போஜன். அந்த சீரியலுக்கு பிறகு சில சீர்யல்களில் நடித்தவருக்கு சினிமா வாய்ப்புகள் வர தொடங்கினாலும், சொல்லும்படியான வாய்ப்புகள் எதுவும் வராததால் பொருமையாக இருந்தவர், இப்படி பொருத்து பொருத்து போனால், சினிமாவில் ஹீரோயினுக்கு பதிலாக அக்கா, அண்ணி வேடம் தான் வரும், என்பதை புரிந்துக் கொண்டவர், நடிகர் நித்தின் சத்யா தயாரிக்கும் படத்தில் நடிக்க ஓகே சொன்னார்.

 

’லாக்கப்’ என்ற தலைப்பில் அப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து டிரைலர் வெளியானாலும், அதில் வாணி போஜனுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லை என்பது நன்றாக தெரிகிறது. மேலும், நித்தின் சத்யா தயாரித்த முதல் படமான ‘ஜருகண்டி’ மிகப்பெரிய தோல்விப் படம் என்பதால், ‘லாக்கப்’ படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் தயங்குகிறார்களாம். இதனால், படம் ரிலீஸாவதற்கு சில பல ஆண்டுகள் ஆகும் என்று கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது. இதனால் அப்செட்டான வாணி போஜன், தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்க, அதிலும் அவருக்கு இரண்டம் பட்ச்சம் வேடம் தானாம். இது போக், வாணி போஜன் நடிக்கும் ‘ஓ மை கடவுளே’ என்ற தமிழ்ப் படத்திலும் அவர் இரண்டாவது நாயகியாக தான் நடிக்கிறாராம்.

 

சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்பட்ட வாணி போஜன் வெள்ளித்திரையில் நயன்தாரா, போல வரவில்லை என்றாலும், ஒரு அமலா பால் போன்றாவது வந்துவிடலாம், என்று ஆசைப்பட்டார். ஆனால், அவருக்கு இதுவரை கிடைத்திருக்கும் சினிமா வாய்ப்புகள் அவரது ஆசையை நிராசையாக்கிவிடும் போன்றே இருக்கிறது.

 

இந்த நிலையில், எப்படியாவது பெரிய படங்களில் நடித்துவிட வேண்டும் என்பதற்காக வாணி போஜன், பல்வேறு வகையில் போட்டொ ஷூட் நடத்தி அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அப்படி இருந்தும் அவர் எதிர்ப்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

 

Vani Bhojan

 

இதனையடுத்து, கவர்ச்சியாக நடிக்கவும் தான் ரெடி, என்பதை அறிவிக்கும் விதமாக சில கவர்ச்சியான புகைப்படங்களை வாணி போஜன் வெளியிட்டு வருகிறார். 

 

Actress Vani Bhojan

 

அந்த வகையில், புடவையில் வாணி போஜன் வெளியிட்ட சில புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. ஆனால், வாணி போஜனின் புகைப்படங்கள் வைரலாவது வழக்கமான ஒன்று தான் என்றாலும், அவரது இந்த கவர்ச்சியை தமிழ் சினிமா தான் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறது.

 

Actress Vani Bhojan

 

Vani Bhojan Actress

 

வாணி கிட்ட இன்னும் அதிகமாக எதிர்ப்பாக்குறாங்களோ!