Aug 27, 2019 02:54 AM

வித்யா பாலனை ஹோட்டல் ரூமுக்கு அழைத்த பிரபலம்! - பரபரப்பு புகார்

வித்யா பாலனை ஹோட்டல் ரூமுக்கு அழைத்த பிரபலம்! - பரபரப்பு புகார்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் வித்யா பாலன், ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடியிருக்கிறார். அவருக்கு சில படங்களின் வாய்ப்புகள் கிடைத்தாலும், பிறகு அவர் செட்டாக மாட்டார், என்று கூறி நீக்கப்பட்டிருக்கிறார்.

 

அந்த வகையில், லிங்குசாமியின் ‘ரன்’ உள்ளிட்ட சில படங்களில் வித்யா பாலனை தான் முதலில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ஆனால், சில காரணங்களுக்காக அவர் அப்படங்களில் இருந்து நீக்கப்பட்டதாக அவரே சமீபத்திய பேட்டிகளில் கூறி வருகிறார்.

 

தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரியாகியிருக்கும் வித்யா பாலன், நல்ல கதைகளாக இருந்தால் தொடர்ந்து தமிழில் நடிப்பேன், என்று தெரிவித்திருக்கிறார்.

 

இந்த நிலையில், வித்யா பாலன் சென்னையில் இருந்த போது அவரிடம் இயக்குநர் ஒருவர் தவறாக நடக்க முயற்சித்தாராம். அதாவது, அவரை ஓட்டல் அறைக்கு அழைத்தாராம்.

 

இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய வித்யா பாலன், ”நான் சென்னையில் இருந்த போது என்னை சந்திக்க ஒரு இயக்குநர் வந்தார். காபி ஷாப்பில் அமர்ந்து பேசலாம் என கூறினேன். அதற்கு அவர், ”நிறைய பேசணும், ரூமுக்கு போவோம்” என்று கூறி, ரூமுக்கு செல்வதிலேயே குறியாக இருந்தார். நானும் ரூமுக்கு சென்று கதவை திறந்தே வைத்தேன். ஆனால், அந்த இயக்குநர் 5 நிமிடங்கள் மட்டுமே இருந்துவிட்டு கிளம்பி சென்றுவிட்டார்” என்று தெரிவித்தார்.