Oct 06, 2019 02:37 PM

மது போதையில் கார் ஓட்டி விபத்து! - இருட்டு அறை நடிகையின் முரட்டு ஓட்டம்

மது போதையில் கார் ஓட்டி விபத்து! - இருட்டு அறை நடிகையின் முரட்டு ஓட்டம்

நடிகர், நடிகைகள் அவ்வபோது மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற இவகாரங்களில் நடிகர்கள் ஜெய், மனோஜ், நடிகை காயத்ரி உள்ளிட்டவர்களின் பெயர்கள் அடிப்பட்ட நிலையில், தற்போது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட நடிகை யாஷிகா ஆனந்தும் இணைந்திருக்கிறார்.

 

சென்னை நுங்கம்பாக்கம் ஹாரிங்டன் சாலையில் நேற்று நள்ளிரவு வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கடை ஒன்றின் மீது பயங்கரமாக மோதியது. அக்கடை அருகில் நின்றுக் கொண்டிருந்த, உணவு டெலிவரி செய்யும் நிறுவன ஊழியர் ஒவர் மீதும் கார் மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். காயமடைந்தவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

 

இந்த நிலையில், விபத்து ஏற்படுத்திய காரில் நடிகை யாஷிகா ஆனந்த் இருந்ததாகவும், விபத்து ஏற்பட்டதும் அவர் காரில் இருந்து இறங்கி, அங்கிருந்து எஸ்கேப் ஆனதாக அங்கிருந்தவர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும், காரில் இருந்தவர்கள் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

 

Car Accident