Jan 11, 2020 04:38 AM

நட்சத்திர ஓட்டலில் நடந்த விபச்சாரம்! - இரண்டு நடிகைகள் கைது

நட்சத்திர ஓட்டலில் நடந்த விபச்சாரம்! - இரண்டு நடிகைகள் கைது

திரை நட்சத்திரங்கள் கலந்துக் கொள்ளும் இரவு விருந்துகள் நட்சத்திர ஓட்டல்களில் நடந்து வருகிறது. இதில், பல்வேறு தவரான சமாச்சாரங்கள் நடப்பதாக போலீஸுக்கு வந்த தகவலை தொடர்ந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த சோதனையில் விபச்சாரம் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

மும்பையில் நடைபெற்ற இந்த சோதனையில் இரண்டு நடிகைகள் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மும்பை நட்சத்திர ஓட்டலில் போலீசார் சோதனை நடத்திய போது, பாலிவுட் குணச்சித்திர நடிகை அம்ரிதா அங்கிருந்து தப்பியோட முயற்சிக்க அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும், ரிச்சா சிங் என்ற நடிகையையும் போலீசார் விபச்சார வழக்கில் கைது செய்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்டுள்ள இந்த இரண்டு நடிகைகளில் ஒருவரான அம்ரிதா, இந்தி பக் பாஸ் 13 வது சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்ட அர்ஹான் கானின் முன்னாள் காதலி ஆவார்.

 

Amrita

 

அர்ஹான் கான், தன்னிடம் இருந்து ரூ.5 லட்சம் ஏமாற்றிவிட்டதாக புகார் கூறிய நடிகை அம்ரிதா, இது தொடர்பாக போலீசில் புகார் அளித்து அர்ஹானை சிறையில் அடைக்கப்போவதாக கூறிய நிலையில், தற்போது அவரே சிறைக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.