திருமணத்திற்கு பிறகு நமீதாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! - புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் கவர்ச்சி அணுகுண்டாக வலம் வந்த நமீதா, ஒரு சில படங்களுக்கு பிறகு தனது பட்டப் பெயருக்கு ஏற்றவாறு உடல் எடை அதிகரித்து ரொம்பவே குண்டாகிவிட்டார். இதனால், அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால், கடை திறப்பு உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
பிறகு தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் அதில் வெற்றி பெற்ற நிலையில்,
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததும், அப்போட்டியில் ஒரு சில எப்பிசோட்கள் மட்டுமே பங்கேற்றவர் அதன் பிறகு, சுற்றுப் பயணம் மேற்கொள்வதில் ஆர்வம் காட்டி வந்தார்.
இதற்கிடையே, திடீரென்று வீரா என்ற தெலுங்கு நடிகர் மற்றும் தயாரிப்பாளரை திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்தவர், ஆந்திர மாநிலத்தில் அவரை திருமணம் செய்துக் கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். சென்னை மச்சான்ஸ்களை மறந்துப் போன நமீதா, திருமணத்திற்குப் பிறகு சென்னை மச்சான்ஸ்கள் அதிர்ச்சியாகும் அளவுக்கு பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதவாது, திருமணத்திற்குப் பிறகு நமீதா மீண்டும் உடல் எடை அதிகரித்து ரொம்ப குண்டாக மாறிவிட்டார். உடல் எடையை குறைப்பதற்காக ரொம்பவே மெனக்கெட்டவர், தற்போது மீண்டும் உடல் அடை அதிகரித்திருப்பதால் ரொம்ப அப்செட்டாகிவிட்டாராம்.
சமீபத்தில் வெளியான நமீதாவின் குண்டு வடிவ புகைப்படம் ஒன்று அவரது ரசிகர்களை ரொம்பவே அதிர்ச்சியாக்கியுள்ளது. இந்த புகைப்படத்தைப் பார்க்கும் அவரது ரசிகர்கள், “திருமணத்திற்குப் பிறகு உண்டாவங்க என்று பார்த்தா...இப்படி, குண்டாய்ட்டங்களே...” என்று தங்களது வருத்ததையும் தெரிவித்துள்ளனர்.