நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணம்! - இந்த நடிகர் தான் மாப்பிள்ளை

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் முக்கியமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘நீதானா அவன்’ படத்தில் நடிகையாக அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ், தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்தவர், ‘காக்கா முட்டை’ போன்ற படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.
சமீபத்தில் வெளியான ‘கனா’ படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததை தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதோடு, முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்த நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமா நடிகர் ஒருவரை அவர் காதலிப்பதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய படம் ஒன்றில் தம்பி கதாபாத்திரத்தில் நடித்த அந்த நடிகரும், ஐஸ்வர்யா ராஜேஷும் பல வருடங்களாக காதலித்து வருகிறார்களாம். இவர்களது காதலுக்கு இரு தரப்பு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து திருமணம் ஏற்பாடுகள் தொடங்கியுள்ளதாம்.
இதை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் விரைவில் திருமதி ஐஸ்வர்யா ராஜேஷாகப் போவதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.