May 11, 2019 12:08 PM

காதல் திருமணம்! - மனம் திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்

காதல் திருமணம்! - மனம் திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனது திறமையை நிரூபிக்கும் நடிகைகளுள் முக்கியமானவராக திகழ்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். பல வருட போராட்டங்களுக்கு பிறகு முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் கையில் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் இருப்பதோடு, முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் படங்களிலும் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

 

இதற்கிடையே, ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக செய்திகள் பரவியது.

 

ஆனால், இதை மறுத்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், ”அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. வெறும் வதந்தி. அதுபோல் ஏதாவது நடந்தால் கண்டிப்பாக முதலில் உங்க்ளுக்கு தான் கூறுவேன்” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

எல்லாம் நடிகைகளும் தங்களைப் பற்றி வெளியாகும் காதல் கிசுகிசுக்களுக்கு முதலில்ல் இப்படி தான் மறுப்பு சொல்கிறார்கள்.