Jul 28, 2019 06:11 AM

அஜித், விஜய் ரசிகர்களுடன் போட்டி! - அதிரடி காட்டும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

அஜித், விஜய் ரசிகர்களுடன் போட்டி! - அதிரடி காட்டும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் மற்றும் அஜித் படங்கள் ரிலீஸாகும் போது அவரது ரசிகர்கள் அதை பண்டிகை போல கொண்டாடுவார்கள். அத்துடன் இல்லாமல் பிறந்தநாளுக்கு மாஸ் காட்டுபவர்கள், படங்களின் பஸ் லுக் போஸ்டர் வெளியான 10 நிமிடத்தில் ஊர் முழுவதும் பேனர் அடித்து ஒட்டுவார்கள்.

 

இவர்களது இந்த அசுர வேகத்தை பார்த்து ஆச்சரியப்படாதவர்களே இல்லை. இப்படி அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் போட்டிபோட்டுக்கொண்டு செய்து வர, இவர்களுக்கு போட்டியாக தற்போது சிவகார்த்திகேயன் ரசிகர்களும் களம் இறங்கிவிட்டார்கள்.

 

நேற்று மாலை 5 மணிக்கு சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் டைடில் லுக் வெளியிடப்பட்டது. இந்த லுக் வெளியான சில நிமிடங்களில் இந்த லுக்கின் போஸ்டரை அடித்து சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கிய சிவகார்த்திகேயனின் ரசிகர்கள், அதை ஊர் முழுவதும் ஓட்டியும் விட்டார்கள்.

 

இதுபோல விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மட்டுமே செய்து வந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயனின் ரசிகர்களும் செய்ய தொடங்கியதால், இனி விஜய், அஜித் ரசிகர்களுக்கு கடும் போட்டியாக இருப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

Hero Title Poster for Fan made

 

‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல இயக்குநர் பிரிதர்ஷன் - நடிகை லிஸி தம்பதியின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கே.ஜெ.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.