Aug 03, 2019 04:10 PM

விஜய்க்கு கதை சொன்ன அஜித் இயக்குநர்!

விஜய்க்கு கதை சொன்ன அஜித் இயக்குநர்!

தமிழ் சினிமாவில் இயக்குநராக வெற்றிப் பெற்ற பலர் அஜித் மற்றும் விஜய் இருவரையும் வைத்து படம் இயக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அவர்களும் நல்ல படங்கள் கொடுக்கும் இயக்குநர்களை அழைத்து கதை கேட்க தவறுவதில்லை.

 

அந்த வகையில், அஜித்தை வைத்து ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கும் வினோத்தின் பணி பிடித்திருந்ததால், தனது அடுத்தப் படத்தையும் வினோத்துக்கே அஜித் கொடுத்திருக்கிறார். இப்படத்தின் ஆரம்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விஜயை சந்தித்து இயக்குநர் வினோத் கதை ஒன்றை சொல்லியிருக்கிறாராம்.

 

Director Vinoth

 

சமீபத்தில் விஜயை சந்தித்த இயக்குநர் வினோத், கமர்ஷியல் கலந்த ஒரு புதுவித கதையை சொன்னாராம். ஆனால், இதுவரை கதை பிடித்ததா, இல்லையா என்பதை விஜய் சொல்லவில்லையாம். இது குறித்து பேட்டி ஒன்றில் இயக்குநர் வினோத்தே கூறியிருக்கிறார்.

 

‘சதுரங்க வேட்டை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான வினோத் கார்த்தியை வைத்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’படத்தை இயக்கியவர் தற்போது அஜித்தை வைத்து தனது மூன்றாவது படத்தை முடித்திருப்பவர், நான்காவதாகவும் அஜித்தை வைத்து இயக்க தயாராகியுள்ளார்.