May 28, 2019 10:06 AM

ரஜினிக்கு கதை சொன்ன அஜித் இயக்குநர்!

ரஜினிக்கு கதை சொன்ன அஜித் இயக்குநர்!

‘பேட்ட’ வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், இளம் இயக்குநர்கள் பலரிடம் கதை கேட்டு வருகிறார். இதற்கிடையே, கே.எஸ்.ரவிக்குமாரிடம் கரு ஒன்றை கூறிய ரஜினிகாந்த், அதற்கு திரைக்கதை அமைக்குமாறும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த நிலையில், அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு படங்களை இயக்கிய சிவாவிடம் ரஜினிகாந்த் கதை கேட்டதாக கூறப்படுகிறது.

 

அஜித்துடன் தொடர்ந்து நான்கு படங்கள் பணியாற்றிய சிவா, நான்காவது படமான ’விஸ்வாசம்’ மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். தற்போது சூர்யாவை வைத்து படம் இயக்குகிறார்.

 

Director Siva

 

இந்த நிலையில், இன்று ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்த இயக்குநர் சிவா, அவரிடம் கதை ஒன்றை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் இயக்குநர் சிவா - ரஜினிகாந்த் சந்திப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது.