Aug 01, 2019 05:16 AM

உயிருக்கு போராடும் அஜித் ரசிகர்! - புழல் சிறையில் விஜய் ரசிகர்

உயிருக்கு போராடும் அஜித் ரசிகர்! - புழல் சிறையில் விஜய் ரசிகர்

அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கிக் கொண்ட சம்பவம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிலையில், தற்போது சமூக வலைதளங்கள் வந்ததால், அதில் சண்டைப் போட்டுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

 

ஒருவரை ஒருவர் தரக்குறைவாக கேலி செய்து மீம்ஸ்களை வெளியிட்டு வந்தாலும், நேரடியாக தாக்கி கொள்ளாமல் இப்படி சமூக வலைதளங்கள் மூலம் தாக்கிக்கொள்வது எவ்வளவோ மேல், என்று பொதுமக்கள் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் இரத்த காவு பாத்திருக்கிறது இந்த ரசிகர்களின் வெறித்தனம்.

 

அஜித்தின் ’நேர்கொண்ட பார்வை’ படமும், விஜயின் ‘பிகில்’ படமும் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில், இவ்விரு படங்கள் குறித்து தகவல்களை பகிர்ந்து வரும் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள், எதிர் அணியின் குறித்து சில தவறான கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள். இதனால், கடந்த சில நாட்களாகவே இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது.

 

இந்த நிலையில், சென்னையில் அஜித் ரசிகர் ஒருவரை விஜய் ரசிகர் கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளார். படுகாயம் அடைந்த அஜித் ரசிகர் உயிருக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் போராடிக்கொண்டிருக்கிறார்.

 

தாக்கிய விஜய் ரசிகரை கைது செய்த போலீஸ், கொலை செய்ய முயற்சி உள்ளிட்ட சில வழக்குகளை பதிவு செய்து, அவரை புழல் சிறையில் அடைத்துள்ளது.