Aug 08, 2019 05:09 AM

அஜித் ரசிகர் தீக்குளிக்க முயற்சி! - திரையரங்கில் பரபரப்பு

அஜித் ரசிகர் தீக்குளிக்க முயற்சி! - திரையரங்கில் பரபரப்பு

அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. நேற்று நள்ளிரவு 1 மணியில் இருந்தே திரையரங்கத்தில் கொண்டாட தொடங்கிவிட்ட அஜித் ரசிகர்கள், தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

 

சென்னையின் பல திரையரங்குகளில் நள்ளிரவு 1 மணி, அதிகாலை 4 மணிக்கு சிறப்ப் காட்சிகள் திரையிடப்பட்டது. இதனால் திரையரங்கங்கள் இருக்கும் பகுதிகள் திருவிழா போல் காட்சியளித்து வருகிறது.

 

இந்த நிலையில், டிக்கெட் பிரச்சினையால் சென்னையில் உள்ள திரையரங்கு முன்பு அஜித் ரசிகர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை, சத்யம் திரையரங்கு முன்பு அஜித் ரசிகர் ஒருவர், உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்திருக்கிறார். காரணம், அவர் டிக்கெட்டுக்காக பல மணி நேரங்கள் காத்திருந்தும் அவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லையாம். அதேபோல், விக்கெட் விலையும் ரொம்ப அதிகமாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

இந்த காட்சியை நேரில் பார்த்த நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.