அஜித் ரசிகர்கள் செய்த குறும்பு! - விஜய் ரசிகர்கள் அப்செட்

நடிகர் விஜய் இன்று தனது 45 வயதை எட்டியுள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது 63 வது திரைப்படத்தின் பஸ்ட் லுக் மற்றும் தலைப்பு நேற்று மாலை 6 மணிக்கும், இரண்டாவது போஸ்டர் நள்ளிரவு 12 மணிக்கும் வெளியிடப்பட்டது.
‘பிகில்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருவதோடு, விஜயின் பிறந்தநாளையும் பலவிதத்தில் கொண்டாடி வருகிறார்கள். உலகம் முழுவதும் இருந்து விஜயின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் வாழ்த்து சொல்ல, ட்விட்டர் இந்தியா நிறுவனமும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பதோடு, அவரை ‘பாக்ஸ் ஆப் கிங்’ என்றும் புகழ்ந்துள்ளது.
மேலும், விஜயின் பிறந்தநாளுக்காக அவரது பல திரைப்படங்கள் பல நாடுகளில் இன்று சிறப்பு காட்சி திரையிடப்பட, சுமார் 200 க்கும் மேற்பட்ட காட்சிகள் சிறப்பு காட்சிகளாக திரைப்படுகிறது. இதுபோல இந்தியாவில் எந்த ஒரு நடிக்கும் இத்தனை அளவுக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்படவில்லையாம். எனவே, இது விஜயின் புதிய சாதனையாக கருதப்படுவதால், இதையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இப்படி, கொண்டாட்ட மூடில் இருக்கும் விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்களின் குறும்புத்தனத்தால் அப்செட்டாகியுள்ளார்கள்.
ஆம், விஜயின் ‘பிகில்’ போஸ்டரில் அப்பா விஜய் சேரில் உட்கார்ந்திருப்பது போலவும், அவருக்கு பக்கத்தில் கால்பந்தை வைத்தபடி மகன் விஜய் நின்றிருப்பது போலவும் புகைப்படம் இருக்கிறது. இதை அஜித் ரசிகர்கள் மாற்றியமைத்து, அப்பா விஜய் இருக்கும் புகைபடத்தில் அஜித் முகத்தை வைத்து மாபிங் செய்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்த போஸ்டரை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வரும் அஜித் ரசிகர்களின் இத்தகைய செயல் விஜய் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதோ அந்த போஸ்டர்,