Aug 03, 2019 03:23 PM

கார் ரேஸில் விட்டதை இதில் பிடிப்பாரா அஜித்?

கார் ரேஸில் விட்டதை இதில் பிடிப்பாரா அஜித்?

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித்துக்கு மற்றவர்களை விட ரசிகர்கள் ஏராளம் என்றாலும், அவர்களை தனது சொந்த முன்னேற்றத்திற்காக என்றுமே பயன்படுத்தியதில்லை. என்றுமே தனது சொந்த உழைப்பை மட்டுமே நம்பும் அஜித், நடிப்பது மட்டும் இன்றி கார் ரேஸ், குட்டி விமானங்கள் இயக்குவது மற்றும் தயாரிப்பு, என்று பிற துறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.

 

தற்போது துப்பாகி சுடுதலில் ஆர்வம் காட்டி வரும் அஜித், அதை வெறும் பொழுதுபோக்காக பார்க்காமல், அதில் சாதிக்கவும் தொடங்கியிருக்கிறார்.

 

தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கம் சார்பாக கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துக் கொண்ட அஜித், 10 மீட்டர் ரைபிள் பிரிவில் 314 புள்ளிகளை பெற்று, டிசம்பர் மாதம் மத்திய பிரதேசத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

 

Ajith Rifle Shoot

 

இதேபோல், கார் ரேஸில் ஆர்வம் காட்டிய அஜித், உலக அளவில் முக்கியமான கார் பந்தயமான எஃப் 1 கார் பந்தயத்தில் பங்கேற்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட நிலையில், அவரது வயது மற்றும் உடல் பறுமன் ஆகியவற்றால் அது நடக்காமல் போனது. 

 

கார் ரேஸில் அஜித் நினைத்தது நடக்காமல் போனாலும், தற்போது அவர் கலக்கி வரும் துப்பாக்கி சுடுதலில் அவர் நிச்சயம் சர்வதேச அளவில் சாதிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.