May 13, 2019 11:09 AM

எமி ஜாக்சன் ரூட்டில் அஜித் பட நடிகை! - திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார்

எமி ஜாக்சன் ரூட்டில் அஜித் பட நடிகை! - திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார்

ஹீரோயினுக்கு முக்கியத்துவன் உள்ள படங்களில் சில நடிகைகள் நடிக்க தொடங்கியிருக்கும் நிலையில், சில நடிகைகளோ திருமணம் செய்து கொள்ளாமலேயே கர்ப்பமாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்கள்.

 

அந்த வகையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமான நிலையில், தற்போது அஜித்தின் ‘பில்லா 2’ பட்த்தில் ஹீரோயினாக நடித்த புரூனா அப்துல்லாவும் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியுள்ளார்.

 

பிரேசில் நாட்டை சேர்ந்த புரூனா, ‘ஐ ஹட் லவ் ஸ்டோரி’ என்ற இந்தி படத்தின் மூலம் நடிகையானார். அதை தொடர்ந்து பல இந்தி படங்களில் நடித்தவர், அஜித்தின் ‘பில்லா 2’வில் ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார்.

 

ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த ஆலன் பிரேசர் என்பவரை காதலித்து வந்த புரூனாவுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.

 

இந்த நிலையில், புரூனா அப்துல்லா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்ததோடு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். மேலும், இன்னும் ஐந்து மாதங்களில் தனக்கு குழந்தை பிறக்க உள்ளது என்பதையும் அவர் கூறியுள்ளார்.

 

Prunaa Abdullah