Sep 08, 2019 06:15 AM

’தல 60’-க்காக அஜித்தின் புதிய லுக்! - புகைப்படம் இதோ

’தல 60’-க்காக அஜித்தின் புதிய லுக்! - புகைப்படம் இதோ

’நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அஜித் தனது அடுத்தப்படத்திற்கு தயராகிவிட்டார். ‘தல 60’ என்று அழைக்கப்படும் இப்படத்தை எச்.வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். கடந்த மாதம் துவங்க இருந்த இப்படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தள்ளிப்போனது. இன்னும் சில நாட்களில் பூஜையுடன் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

படத்தில் அஜித் போலீஸாகவும், பாசமுள்ள தந்தையாகவும் நடிப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அஜித் நரைத்த முடியுடன் நடிப்பாரா அல்லது கருப்பு முடியுடன் நடிப்பாரா, என்ற எதிர்ப்பார்ப்பும் ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

 

இந்த நிலையில், ‘தல 60’ படத்திற்காக அஜித்தின் புதிய லுக் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில், அஜித் தனது பழைய ஹர் ஸ்டைலான கருப்பு முடிக்கு மாறியுள்ளார். இதைப் பார்த்த அஜித் ரசிகர்கள் குஷியடைந்திருக்கிறார்கள்.

 

இதோ அந்த புகைப்படம்,

 

Ajith New look for Thala 60