May 28, 2019 05:35 AM

அரசியல் பேச தயாராகும் அஜித்!

அரசியல் பேச தயாராகும் அஜித்!

அரசியலுக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, என்று அவ்வபோது கூறி வரும் அஜித், தான் நடிக்கும் படங்களில் கூட அரசியல் பேசாமல் இருக்கும் நிலையில், தற்போது அரசியல் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், அஜித் தனது அடுத்தப் படத்திற்கு தயாராகிவிட்டார். இப்படத்தையும் எச்.வினோத் தான் இயக்குகிறார்.

 

இதில், அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அஜித்துக்கு போலீஸ் வேடம் இல்லை, அரசியல்வாதி வேடம், என்றொரு தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகும் இப்படத்தில் அஜித் அரசியல் பேசப்போவதாகவும் கூறப்படுகிறது.

 

‘சர்கார்’ படத்தில் விஜய் எப்படி மத்திய மற்றும் மாநில அரசுகளை விமர்சித்து வசனம் பேசினாரோ, அதுபோல அஜித்தின் 60 வது படமும் அரசியலையும், அரசையும் விமர்சிக்கும் வகையிலான பல வசனங்களோடு தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.