Oct 04, 2019 06:16 PM

மீண்டும் இளமை தோற்றத்திற்கு மாறிய அஜித்! - வைரலாகும் புகைப்படங்கள் இதோ

மீண்டும் இளமை தோற்றத்திற்கு மாறிய அஜித்! - வைரலாகும் புகைப்படங்கள் இதோ

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார். அஜித்தின் 60 வது படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சத்தமில்லாமல் தொடங்கி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

 

மேலும், படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாகவும், பாசமிக்க தந்தையாகவும் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. கடந்த சில படங்களில் அஜித் நரைத்த முடியுடன் தோற்றுவது அவரது ரசிகர்களுக்கு சற்று கவலை அளித்து வந்த நிலையில், ‘தல 60’-க்காக அஜித் மீண்டும் இளமை தோற்றத்திற்கு மாறியிருக்கிறார்.

 

இன்று விமானம் நிலையத்தில் அஜித் வரும்போது அவரது இளமை தோற்றத்தை சிலர் புகைப்படம் எடுத்துள்ளனர். தற்போது அந்த புகைப்படங்கள் தான் வைரலாகி டிரெண்டிங்காகி வருகிறது.

 

இதோ அந்த புகைப்படங்கள்,

 

Ajith New Look Photo

 

Ajith New Look