Apr 21, 2020 07:19 AM

அஜித்தின் 61 வது படம்! - இயக்குநர், தயாரிப்பாளர் பற்றிய தகவல் இதோ

அஜித்தின் 61 வது படம்! - இயக்குநர், தயாரிப்பாளர் பற்றிய தகவல் இதோ

அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கிய எச்.வினோத், அஜித்தின் 60 வது படமான ‘வலிமை’ படத்தை இயக்கி வருகிறார். கொரோனா பாதிப்பால் இப்படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்து படப்பிடிப்பு தொடங்கினாலும், படம் அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என்பதால், அஜித் ரசிகர்கள் அப்செட்டாகியுள்ளார்கள்.

 

இந்த நிலையில், அப்செட்டில் இருக்கும் அஜித் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் விதத்தில் அஜித்தின் 61 வது படத்தின் தகவல் ஒன்று கசிந்திருக்கிறது. ஆம், அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 

‘இறுதிச் சுற்று’ என்ற வெற்றிப் படத்தை கொடுத்தவரும், தற்போது சூர்யாவை வைத்து ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கிக் கொண்டிருப்பவருமான சுதா கொங்கரா தான் ‘தல 61’ படத்தை இயக்கப் போகிறாராம். இந்த படத்தை ஸ்ரீ கோகுலம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.

 

மலையாளத்தில் பல வெற்றிப் படங்களை தயாரித்திருக்கும் ஸ்ரீ கோகுலம் மூவிஸ், கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தது. இப்படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடித்த ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.