’ஜன நாயகன்’ பட வழக்கின் தீர்ப்பு நாளை காலை வழங்கப்படுகிறது!
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. அதே சமயம், மறு வெளியீட்டு தேதியை அறிவிக்காததால், படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் விஜய் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், ’ஜன நாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில் நீதிபதி பி.டி.ஆஷா, நாளை (ஜனவரி 9) 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால், படம் நாளை மறுநாள் வெளியாகுமா ? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் தீர்ந்தாலும், படத்தை உடனடியாக வெளியிடாமல், பொங்கல் பண்டிகையின் தொடக்க நாளான ஜனவரி 14 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருப்பதாகவும், அது குறித்து வியாபார ரீதியிலான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
எது எப்படியோ, நாளை காலை வழங்க இருக்கும் தீர்ப்பை வைத்தே விஜயின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டு நிலை தெரிய வரும்.

