அஜித்தை நிராகரித்த இயக்குநர்! - விஜயுடன் இணைகிறார்!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. படத்தின் மீதான வழக்கு, இயக்குநர் அட்லீக்கு எதிரான புகார், படப்பிடிப்பில் விபத்து என்று பல பிரச்சினைகள் எழுந்தாலும் படப்பிடிப்பு எந்தவித பாதிப்பும் இன்றி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையே, இப்படத்திற்குப் பிறகு விஜய் எந்த இயக்குநர் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தற்போது அஜித்தை வைத்து ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கி வரும் எச்.வினோத் சொன்ன கதை விஜய்க்கு பிடித்துவிட, அடுத்த படத்தில் அவருடன் இணைய முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரிக்கும் போனி கபூர் அஜித்தின் மற்றொரு படத்தையும் தயாரிக்க இருக்கிறார். அந்த படத்தை இயக்குநர் வாய்ப்பையும் வினோத்துக்கே அவர் வழங்கினார். ஆனால், அஜித்துடன் படப்பிடிப்பில் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவருடன் இரண்டாவது முறையாக இணைய வினோத் விரும்பாமல் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டாராம்.
மேலும், ’நேர்கொண்ட பார்வை’ படம் கமிட் ஆவதற்கு முன்பாக விஜய்க்கு ஒரு கதை கூறி, ஓகே பெற்றவர் தற்போது அந்த கதையை முழுவதுமாக டெவலப் செய்துவிட்டாராம். விரைவில் விஜயை சந்தித்து முழு கதையையும் வினோத் கூற இருப்பதாகவும், அஜித் படம் முடிந்த பிறகு வினோத் விஜயுடன் இணைவார் என்றும் கூறப்படுகிறது.