விஜய்க்கு மரண போஸ்டர் அடித்த அஜித் ரசிகர் மரணம்!

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் நேரடியாக மோதிக்கொண்ட காலம் போயி தற்போது சமூக வலைதளங்களில் மோதிக்கொள்ள தொடங்கியிருக்கிறார்கள். அஜித் ரசிகர்கள் விஜயை கேவலமாக கிண்டல் செய்வது, பதிலுக்கு விஜய் ரசிகர்கள் அஜித்தை கேவலமாக கலாய்ப்பது என்ற இவர்களது சண்டை சில நேரங்களில் சமூக வலைதளத்தையே சற்று ஆட்டம் காணவும் செய்து விடுகிறது.
இதற்கிடையே, அஜித் ரசிகரகள் நேற்று #RIPactorVIJAY என்ற டேக்கை டிரெண்டிங்காக்கினார்கள். இறப்புக்கு பயன்படுத்தும் RIP என்ற வார்த்தையை, நலமுடன் இருக்கும் விஜய்க்கு பயன்படுத்தியது விஜய் ரசிகர்களுக்கு மட்டும் இன்றி, பொதுமக்களுக்கும் அஜித் ரசிகர்கள் மீது கோபம் ஏற்பட செய்தது. இதற்கு சில பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிறகு, விஜய் ரசிகர்கள் #LongLiveVijay என்ற டேக்குகளை இடம்பெற செய்து டிரெண்டாக்கினார்கள். அஜித் ரசிகர்கள் விஜய்க்கு எதிராக இத்தகைய கேவலமான செயலில் ஈடுபட்டது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.
இந்த நிலையில், இதேபோல கடந்த வருடம் கார்த்திக் என்ற அஜித் ரசிகர், விஜய்யின் பிறந்தநாளில் மரண போஸ்டர் அடித்து ஒட்டி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினார். அவர், நேற்று பைக் விபத்தில் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால், தற்போது இந்த தகவல் வைரலாக பரவி வருகிறது.