Jun 21, 2019 07:03 AM

42 வயதில் இரண்டாவது திருமணம் செய்யும் அஜித் பட நாயகி!

42 வயதில் இரண்டாவது திருமணம் செய்யும் அஜித் பட நாயகி!

நடிகர்கள் சரியான வயதில் திருமணம் செய்துக் கொண்டாலும், பல நடிகைகள் 40 வயதை கடந்தும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்க, சில நடிகைகள் 40 வயதை கடந்த பிறகு மறுமணம் செய்துக்கொள்கிறார்கள்.

 

அந்த வகையில், தற்போது 42 வயதாகும் பூஜா பத்ரா இரண்டாவது திருமணம் செய்ய உள்ளார். தமிழ், மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்திருக்கும் பூஜா பத்ரா, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார்.

 

கடந்த 2002 ஆம் ஆண்டு டாக்டர் சோனு அலுவாலா என்பவரை திருமணம் செய்துக் கொண்ட பூஜா பத்ரா, அவரை 2010 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டார்.

 

பிறகு பூஜா பத்ராவுக்கும், இந்தி நடிகர் நவாப் ஷாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. தற்போது தங்களது காதலை இருவரும் தெரியப்படுத்தும் விதத்தில், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

 

Pooja Patra

 

இந்த நிலையில், நடிகர் நவாப் ஷா, பூஜா பத்ராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருப்பதோடு, “உன்னைப்போல் ஒரு பெண்ணை கண்டுபிடிக்க எனக்கு 46 வருடங்கள் ஆகியிருக்கிறது” என்றும் பதிவிட்டுள்ளார்.