Jun 26, 2019 06:39 AM

அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ ரிலீஸ் தேதி மாற்றம்!

அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ ரிலீஸ் தேதி மாற்றம்!

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்திருக்கிறார். அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான இந்திப் படமான பிங்க் படத்தின் ரீமேக் தான் இப்படம்.

 

இதில், அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்திருக்கிறார். இவர்களுடன் ரங்கராஜ் பாண்டே, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்.

 

இப்படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்திருப்பதோடு, சில காட்சிகள் மட்டுமே வருவதாக கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. மேலும், அஜித் பேசும் வசனங்கள் ரசிகர்களை கவர்ந்திருப்பதோடு, ரசிகர்களுக்கு பிடித்த சில கூடுதலான காட்சிகளையும் இயக்குநர் சேர்த்திருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், டிரைலருக்கு கிடைத்த வரவேற்பால் படத்தை முன் கூட்டியே ரிலீஸ் செய்யும் முடிவுக்கு தயாரிப்பு தரப்பு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அதன்படி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு முன்னதாக, ஆகஸ்ட் 1 ஆம் தேதியே ‘நேர்கொண்ட பார்வை’ வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.