Feb 27, 2019 05:59 AM

அஜித் படத்தில் இயக்குநர் விலகல்! - புது இயக்குநர் யார் தெரியுமா?

அஜித் படத்தில் இயக்குநர் விலகல்! - புது இயக்குநர் யார் தெரியுமா?

’விஸ்வாசம்’ வெற்றியை தொடர்ந்து அஜித் தற்போது இந்தி படமான ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்க, ஷ்ரத்த ஸ்ரீநாத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார்.

 

தற்போது விறுவிறுப்பான படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பட புகழ் இயக்குநர் வினோத் இயக்கி வருகிறார்.

 

அஜித்தின் 59 வது படமாக உருவாகும் இப்படத்திற்குப் பிறகு, அஜித்தின் 60 வது படத்தையும் வினோத் இயக்குவதாக இருந்தது. ஆனால், பிங்க் ரீமேக் படத்திற்குப் பிறகு இயக்குநர் வினோத் சில மாதங்கள் ஓய்வு எடுக்க விரும்புகிறாராம். அதே சமயம், அஜித் தனது 60 வது படத்தை உடனே ஆரம்பிக்கும் முடிவில் இருப்பதால், அப்படத்தில் இருந்து வினோத் விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த நிலையில், இயக்குநர் வினோத்துக்கு பதிலாக அஜித்தின் 60 வது படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது சிறுத்தை சிவாவுடன் அஜித் மீண்டும் இணைய விரும்புவதால், அவரது 60 வது படத்தை இயக்கும் வாய்ப்பை சிறுத்தை சிவாவுக்கே கொடுக்க அஜித் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

Director Siva and Director Vinoth

 

ஒருவேளை இது நடந்தால், சிறுத்தை சிவா அஜித்துடன் 5 வது முறையாக இணையும் படம், எந்த மாதிரியான கதையாக இருக்கும் என்று தற்போதே எதிர்ப்பார்ப்பு எகிற தொடங்கியுள்ளது.