Mar 09, 2019 08:12 AM

அஜித்தின் நிறைவேறாத ஆசை! - அப்செட்டில் ரசிகர்கள்

அஜித்தின் நிறைவேறாத ஆசை! - அப்செட்டில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக உள்ள அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் ரசிகர் மன்றங்களை கலைத்த பிறகும் அவருக்காக எதையும் செய்ய அவரது ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள்.

 

இதற்கிடையே, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையன்று வெளியான அஜித்தின் ‘விஸ்வாசம்’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. ரசிகர்களுக்கான ஒரு படமாக மட்டும் இன்றி, பெண்கள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கான படமாக விஸ்வாசம் இருந்ததால் தான் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

 

உலகம் முழுவதும் இதுவரை ரூ.200 கோடியை வசூலித்திருக்கும் விஸ்வாசம் தற்போதும் தமிழகத்தின் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில், மார்ச் 1 ஆம் தேதி ‘விஸ்வாசம்’ தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீஸானது. தமிழகத்தில் பெற்ற வெற்றியை போல தெலுங்கிலும் படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லையாம். இதனால், தெலுங்கில் விஸ்வாசம் படு தோல்வி படமாக அமைந்திருக்கிறது.

 

படம் வெளியான இரண்டு நாட்களில் மொத்த வசுலே ரூ.1 கோடியாக இருப்பதால், விஸ்வாசம் தெலுங்கு டப்பிங் மிகப்பெரிய தோல்விப்படமாக அமையும் என்று தெலுங்கு சினிமா விநியோகஸ்தர்கள் தரப்பு தெரிவித்திருக்கிறது.

 

விஜய், சூர்யா, விக்ரம், விஷால் என்று பல தமிழ் நடிகர்களின் படங்கள் தெலுங்கில் அவ்வபோது மிகப்பெரிய வெற்றி பெற்று வந்தாலும், அஜித் படங்கள் மட்டும் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது. எப்படியாவது தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி ஒன்றை கொடுக்க வேண்டும் என்ற அஜித்தின் ஆசையை ‘விஸ்வாசம்’ நிறைவேற்றும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இப்படமும் தோல்வியடைந்ததால், அஜித்தின் ஆசை நிறைவேறாமலே போய்விட்டது.

 

அஜித்தின் ஆசை நிறைவேறாததை அறிந்த அவரது ரசிகர்கள் ரொம்பவே அப்செட்டாகியுள்ளார்கள்.