Mar 06, 2019 05:57 AM
அஜித்தின் ‘விஸ்வாசம்’ செய்த மிகப்பெரிய சாதனை! - முழு விபரம் இதோ

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையன்று வெளியான ‘விஸ்வாசம்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதோடு, வசூலிலும் பல சாதனைகளை நிகழ்த்தியது.
தமிழகத்தில் பல திரையரங்குகளில் இன்னும் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிஉர்க்கும் விஸ்வாசம் ரூ.200 கோடி வசூலித்து மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
அதன் முழு விபரம் இதோ,
தமிழ்நாடு- ரூ. 139 கோடி
ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, மற்ற இடங்கள்- ரூ. 18 கோடி
வெளிநாடு- ரூ. 43 கோடி
மொத்தமாக படம் ரூ. 200 கோடிக்கு வசூலித்துள்ளது.
விஸ்வாசத்தின் இந்த வெற்றியை சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வரும் அஜித் ரசிகர்கள், சில திரையரங்குகளிலும் இதனை கொண்டாட முடிவு செய்திருக்கிறார்கள்.