அஜித் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் படம் பற்றிய லேட்டஸ் அப்டேட்!

அஜித் - இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் வெளியான ‘மங்காத்தா’ மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது அப்படத்தின் வெற்றியை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில், சமீபத்தில் வெங்கட் பிரபுவை அழைத்து அஜித் பேசியதால், மீண்டும் அஜித் - வெங்கட் பிரபு கூட்டணி இணைவதோடு, அது ‘மங்காத்தா 2’வுக்காக தான், என்றும் கூறப்பட்டது. இதையடுத்து, ‘மங்காத்தா 2’ பற்றிய தகவல்களை பரப்பு ரசிகர்கள் டிரெண்டாக்கினார்கள்.
ஆனால், உண்மையாகவே அஜித் - வெங்கட் பிரபு கூட்டணி ‘மங்காத்தா 2’ வுக்காக இணையவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், வெங்கட் பிரபுவை அஜித் சந்தித்த போது, ‘மங்காத்தா 2’ பற்றி எதுவும் பேசாமல், சிறிய விஷயமாக இருந்தாலும், அழகாக இருக்க வேண்டும், அப்படிப்பட்ட கதையை தயார் செய்ய சொன்னதாக வெங்கட் பிரபு கூறியிருக்கிறார்.
‘மங்காத்தா 2’ இல்லை என்றாலும், ‘மங்காத்தா’ கூட்டணி மீண்டும் இணைவது உறுதியானதால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.