தொகுப்பாளினி டிடி-யின் புதிய முயற்சி! - ரசிகர்கள் ஏற்பார்களா?

சின்னத்திரை தொகுப்பாளினிகளில் முக்கியமானவராக வலம் வருபவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. முன்னணி சேனலில் தொகுப்பாளியாக இருக்கும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பதோடு, பிரபலங்கள் பலரும் இவருடன் நெருக்கமாக பழகி வருகிறார்கள்.
இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை இவருக்காக பார்க்கும் கூட்டமும் ஒன்று. தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவியிருக்கும் டிடி, சில படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், சின்னத்திரை, வெள்ளித்திரை ஆகியவற்றை தொடர்ந்து வானொலியில் டிடி நுழைந்துள்ளார். பொதுவாக வானொலியில் இருந்து சின்னத்திரைக்கு வந்தவர்களின் பட்டியல் தான் அதிகம் என்ற நிலையில், டிடி வித்தியாசமாக பிரபல ரேடியோவில் ஆர்.ஜே-வாக களம் இறங்கியுள்ளார்.
சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பு வானொலியில் டிடி-க்கு கிடைக்கிறதா, அவரை ஆர்.ஜே வாக ரசிகர்கள் ஏற்பார்களா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.