வாழ்க்கையை சீரழித்த திருமணமான நடிகர் யார்? - மனம் திறந்த ஆண்ட்ரியா!

நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா, திருமணமான நடிகர் ஒருவருடன் காதல் கொண்டதால் தான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்புக்குள்ளதாகவும், அதனால் சில வருடங்கள் சிகிச்சை பெற்றுக் கொண்டதாகவும், கவிதை புத்தக வெளியீட்டில் பேசியிருந்தார்.
இதற்கிடையே, ஆண்ட்ரியாவின் வாழ்க்கையை சீரழித்த அந்த நடிகர் அரசியல் குடும்ப வாரிசு என்று தகவல்கள் பரவ, அவர் யார்? என்ற உண்மையை ஆண்ட்ரியா விரைவில் வெளியிட இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அதுபோல எந்த ஒரு விளக்கத்தையும் ஆண்டியா அளிக்கவில்லை.
மேலும், தலைமறைவாக இருந்த ஆண்ட்ரியா, சில பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது கூட பத்திரிகையாளர்கள் தவிர்க்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில், தனது காதல் விவகாரம் குறித்து முதல் முறையாக பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் ஆண்ட்ரியா, ”10 ஆண்டுகளுக்கு முன்பு காதலால் நான் பாதிக்கப்பட்டேன். அதை தான் அந்த கவிதை புத்தக வெளியீட்டி விழாவில் கூறினேன். அப்போது அங்கே எந்த பத்திரிகையாளரும், ஊடக கேமராக்களும் கிடையாது. அதனால் தான் நான் அதை கூறினேன். அந்த கவிதையும் 10 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அந்த கவிதையை வாசிக்கும் போது என்னையே நான் மறந்துவிட்டேன். நான் ஒரு நடிகை என்பதையும் மறந்துவிட்டேன்.
பிறகு, நான் கூறியதை திரித்து, நான் சொல்லாத தகவல்களை பரப்பி விட்டார்கள். அரசியல் வாரிசு நடிகர், என்றெல்லாம் கூறிவிட்டார்கள். தேவையில்லாத வதந்தி குறித்து நான் எதற்கு விளக்கம் அளிக்க வேண்டும், என்று தான் அமைதியாக இருந்துவிட்டேன்.” என்று கூறியவர், தன் காதல் வாழ்க்கை குறித்து பொது நிகழ்ச்சியில் பேசியது தவறு என்பதை நான் உணர்ந்துவிட்டேன், என்றும் தெரிவித்துள்ளார்.