Jul 29, 2018 10:22 AM
கமலை கலாய்த்த ஆண்ட்ரியா - பிக் பாஸ் வீட்டில் நடந்த கலபரம்!

கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து நடித்திருக்கும் ‘விஸ்வரூபம் 2’ வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அப்படத்தின் டிரைலர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியிடப் போகிறார்கள். அதற்கு முன்பாக பிக் பாஸ் வீட்டில் விஸ்வரூபம் 2 படக்குழுவினர் சென்றிருந்தார்கள்.
பூஜா குமார், ஆண்ட்ரியா, இசையமைப்பாளர் ஜிப்ரான், பாடகர் சத்யபிராஷ் ஆகியோர் பிக் பாஸ் வீட்டுற்கு செல்ல, அங்கு கமல்ஹாசன் எழுதிய சாதி மதம் எனும் வியாதியை போக்கிட பாடலை ஆண்ட்ரியாவும், சத்ய பிரகாஷும் பாடினார்கள்.
பிறகு அந்தாஷரி விளையாடிய போது த என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பாடலை பாட வேண்டும் என்ற நிலையில், ஜனனி “தில் பர்ஜானே..” என்று தொடங்கும் பாடலை பாடினார். உடனே குறுக்கிட்ட ஆண்ட்ரியா, தமிழ்ப் பாட்டு பாடும்மா, என்றார். உடனே ஜனனி, ‘இது கமல் சார் பாட்டு, தமிழ் பாட்டு தான் என்று கூறினார்.